Monday, April 13, 2009

என்னவளின் நினைவுகளில்

என்னை எனக்கே அறிமுகம் செய்தவள்
நிறை மட்டுமின்றி என் குறைகளையும் சொல்பவள்
என் மனசாட்சிக்கு மாற்று உருவம் அவள்

என் படைப்புகளின் முதல் விசிறியும் விமர்சனம் செய்பவுளும் நீ
என் சாதனைகள் என் தலைக்கு ஏறாமலும்
என் சறுகல்கள் என்னை கீழே தள்ளாமலும் பார்த்து கொண்டவளும் நீ

அனைத்தும் அறிந்த வயதிலும் என்னை குழந்தையாய் உணர செய்தவள்
தன்னையும் குழந்தையாய் பாவிக்க செய்து என்னை தாயும் ஆக்கியவள்
என்னை நெஞ்சில் சுமந்து என்னை சுற்றியே தன் உலகத்தை படைத்து கொண்டவள்

அவளில்லா இந்த உலகத்தில் இன்னும் பயணித்து கொண்டிருக்கிறேன்
உயிரை மாய்த்து கொள்ளும் கோழைதனம் அவளுக்கு பிடிக்காது என்பதால்
என் காலம் வரும்வரை பயணித்து கொண்டிருப்பேன் அவள் நினைவுகளில்

4 comments:

ச.பிரேம்குமார் said...

//என் காலம் வரும்வரை பயணித்து கொண்டிருப்பேன் அவள் நினைவுகளில்//

நினைவுகளும் சில சமயம் உற்றத்துணையாய் அமைந்துவிடுவதுண்டு அண்ணா

Rasal said...

No Words can exclaim about this. Very good one annatha!!!

Gowri Shankar Ramaswamy said...

Thuyaram enbadhu oruvar arugil illaadhadhaal varuvadhillai. Avar nammakkul uraindhiruppadhaal dhaan!

padfOOt said...

A million thoughts swirling but not a single word, bro!