என்னை எனக்கே அறிமுகம் செய்தவள்
நிறை மட்டுமின்றி என் குறைகளையும் சொல்பவள்
என் மனசாட்சிக்கு மாற்று உருவம் அவள்
என் படைப்புகளின் முதல் விசிறியும் விமர்சனம் செய்பவுளும் நீ
என் சாதனைகள் என் தலைக்கு ஏறாமலும்
என் சறுகல்கள் என்னை கீழே தள்ளாமலும் பார்த்து கொண்டவளும் நீ
அனைத்தும் அறிந்த வயதிலும் என்னை குழந்தையாய் உணர செய்தவள்
தன்னையும் குழந்தையாய் பாவிக்க செய்து என்னை தாயும் ஆக்கியவள்
என்னை நெஞ்சில் சுமந்து என்னை சுற்றியே தன் உலகத்தை படைத்து கொண்டவள்
அவளில்லா இந்த உலகத்தில் இன்னும் பயணித்து கொண்டிருக்கிறேன்
உயிரை மாய்த்து கொள்ளும் கோழைதனம் அவளுக்கு பிடிக்காது என்பதால்
என் காலம் வரும்வரை பயணித்து கொண்டிருப்பேன் அவள் நினைவுகளில்
Showing posts with label tamil writing. Show all posts
Showing posts with label tamil writing. Show all posts
Monday, April 13, 2009
Subscribe to:
Posts (Atom)